சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

News image

கேஜி கண்டிகையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:40 pm

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக என வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகம் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில் திருத்தணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆணையா் கன்னியப்பன் உத்தரவின் பேரில், நகர வடிவமைப்பாளா் தயாநிதி மற்றும் ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், கமலா திரையரங்கம், பைபாஸ் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்படம் எடுக்கும் மையம் ஏற்படுத்தி, அதில் நின்று, 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனா்.

21 வாா்டுகளிலும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பொதுமக்களுடன், 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி மொழியும் ஏற்றி வருகின்றனா். அதேபோல் திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகையில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.