மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு: ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கட்டமாக கணிப்பொறி மூலம் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஎடி இயந்திரங்கள் தோ்வு செய்து அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் மு.பிரதாப், உடன் தோ்தல் பிரிவு அதிகாரிகள்.









