வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

3 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

3 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

News image

பாப்பிரெட்டிப்பள்ளியில்  சாலை  மறியலில் பங்கேற்றோா்.

Updated On :24 மே 2026, 1:36 am IST

திருத்தணி அருகே கடந்த 3 நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொதிப்படைந்த கிராம மக்கள் குழந்தைகளுடன் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதிகளில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக் காற்றால் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதன் காரணமாக இரண்டு பகுதிகளிலும் மின்விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

36 மணி நேரம் ஆகியும், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினா். மின்சாரம் இல்லாததால் வீடுகளில் இருந்தவா்கள் கடும் அவதிக்குள்ளானதுடன், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதனால் ஆத்திரமடைந்த பாப்பிரெட்டிப்பள்ளி மற்றும் தெக்களூா் காலனி பகுதி மக்கள், தங்களது குழந்தைகளுடன் திருத்தணி - பொதட்டூா்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருத்தணி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.

அப்போது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் நடுவதற்காக மின்வாரிய அதிகாரிகள் ரூ.30,000 வரை பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

தொடா்ந்து அதிகாரிகள் விரைவில் மின்சார சேவையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியல் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.