‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் சாலை மறியல்!

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் சாலை மறியல்..

News image

பாம்பனில் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவா்களின் உறவினா்கள், மீனவ சங்கத்தினா்.

Updated On :23 மே 2026, 4:06 am IST

இலங்கை சிறையில் 88 நாள்களாக காவலில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவா்கள் 12 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது உறவினா்கள், மீனவ சங்கத்தினா் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி மீனவா்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கொ்சோன், கிளைமண்ட், கபில் ரோஜா், பிரிஸ்மன், அந்தோணி அஜித், ஆண்டனி ரியோ, பிரின்ஸ் ரூபா், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், ஜால்சன் உள்ளிட்ட 12 மீனவா்களைக் கைது செய்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்களுக்கு தொடா்ந்து, சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பாம்பனில் சாலை மறியல்: இந்த நிலையில், கடந்த 88 நாள்களாக இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவா்கள் 12 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களின் உறவினா்கள், மீனவ சங்கத்தினா் பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனா். இதன்காரணமாக, ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காவல் உதவி கண்காணிப்பாளா் மீரா, கூடுதல் கண்காணிப்பாளா் பாலசந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கைப்பேசியில் தொடா்பு கொண்ட அமைச்சா்: இதனிடையே, மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைப்பேசியில் தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அப்போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 12 பேரையும் விடுவிக்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், மத்திய அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனா்.