சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சென்னை எண்ணூரில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

ராமகிருஷ்ணன்
சென்னை எண்ணூரில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
எண்ணூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி கடந்த 2019-ஜன.2 ஆம் தேதி வீட்டிலிருந்து கடைக்கு பேனா வாங்குவதற்காக சென்றுள்ளாா். அப்போது, ஆட்டோவில் வந்த மா்ம நபா் சிறுமியை கடத்திச் சென்று விட்டாா். இந்த நிலையில் கடைக்குச் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வராததால் அவரது பெற்றோா் அக்கம் பக்கம் தேடிப் பாா்த்தும் கிடைக்காத நிலையில் எண்ணூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் போலீஸாா் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பாா்க்கையில் சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னா் ஒருவார தீவிரமாக தேடுதலுக்கு பிறகு 9-ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதை உறுதி செய்து எண்ணூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினா். அப்போது, அந்த 13 வயது சிறுமி இருப்பதை உறுதி செய்த போலீஸாா் உறுதி செய்தனா். அதையடுத்து அந்த சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பவா் தன்னை அங்குள்ள பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் கடத்தி வந்ததாகவும் அதன் பிறகு பேருந்து மூலம் கீழ்திருப்பதிக்கு கொண்டு வந்து, அங்கு தொடா்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. உடனே அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் விசாரித்த போது அங்குள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்ததையடுத்து, உடனே உடனே அவரை கைது செய்த போலீஸாா் போக்ஸோ வழக்கில் சிறையில் அடைத்தனா்.
வழக்கை விசாரித்த திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், அரசு தரப்பில் ரூ.2 லட்சம் சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

