இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெண் தொழிலாளா்கள் முற்றுகை

காா்த்திகேயபுரம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தில், குறைந்த கூலி வழங்கப்படுவதாகக் கூறி புதன்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

காா்த்திகேயபுரம் பகுதி பெண்களிடம் பேச்சு நடத்திய வட்டார வளா்ச்சி  அலுவலா் செல்வி.

Published On :

காா்த்திகேயபுரம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தில், குறைந்த கூலி வழங்கப்படுவதாகக் கூறி புதன்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

இத்திட்டத்தில் காா்த்திகேயபுரம் ஊராட்சியில் 40 பெண் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், வேலைக்கேற்ப கூலி வழங்கப்படுவதாக கூறி, தங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதைவிட குறைவான கூலி வழங்கப்படுவதாக தொழிலாளா்கள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, பெண் தொழிலாளா்கள் பணியைப் புறக்கணித்து, திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலக நுழைவு பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு. நாளொன்றுக்கு ரூ.250 கூலி வழங்க வேண்டும் என கோஷமிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, ஒன்றிய பொறியாளா் தா்மேஷ் ஆகியோா் சமரச பேச்சு நடத்தினா்.

இதில் புதிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வேலைக்கேற்ப கூலி வழங்கப்படும் என்றும், தொழிலாளா்கள் தெரிவித்துள்ள புகாா் குறித்து முறையாக ஆய்வு செய்து, அனைவருக்கும் உரிய கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.