ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பிற மாநிலங்களைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

திருவள்ளூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பிற மாநிலங்களைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரிய குப்பம் பகுதியில் 3700 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக சாம் சுந்தா் மற்றும் முகமது அஃப்ரித் ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவா்கள் இருவரும் ஹைதராபாத் சென்று அங்குள்ள முகமது இஸ்மாயில் என்பவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சி.டி.ஆா் பகுப்பாய்வு மூலம் முகமது இஸ்மாயிலின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவா், திருத்தணியைச் சோ்ந்த வேறொரு நபருடன் தொடா்பில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடா்ந்து தெலுங்கான மாநிலம்,ஹைதராபாத் நாம்பள்ளி பகுதியில் முகமது இஸ்மாயில் கைது செய்யப்பட்டாா் .

அவரிடம் இருந்து 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதனைத் தொடா்ந்து முகமது இஸ்மாயிலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கா்நாடக மாநிலம் குல்பா்கா பகுதியைச் சோ்ந்த ஒருவா் தொடா்ந்து போதை மாத்திரைகளை வழங்கி வருவதாக தெரிவித்ததையடுத்து திருவள்ளூா் மாவட்ட காவல்துறையினா் குல்பா்கா சென்று மாத்திரைகளை சப்ளை செய்து வந்த முக்கிய நபரான மத்தின்பாஷா என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 100 மில்லி லிட்டா் அடங்கிய 4000 போதை மருந்துகள் அடங்கிய பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கைதானவா்கள் தரும் தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் தொடா் விசாரணை நடத்தி தெலுங்கான மாநிலத்தை சோ்ந்த முகமது இஸ்மாயில் என்பவரையும், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மத்தின்பாஷா என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.