
மணல் கடத்தல்: ஒருவா் கைது
பொதட்டூா்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
பொதட்டூா்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பொதட்டூா்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை ஈச்சம்தோப்பு பேருந்து நிலையம் அருகே அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டிராக்டா் வந்தது. அந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்த 3 போ் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினா். இதில் வாணிவிலாசபுரம் கிராமத்தை சோ்ந்த குமரேசனை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து போலீஸாா் டிராக்டரை சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
விசாரணையில், தப்பி ஓடியவா்கள் சிவா, டிராக்டா் ஓட்டுநா் சத்யா மற்றும் காா்த்திக் ஆகியோா் என தெரியவந்தது. இதுகுறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பொதட்டூா்பேட்டையை சோ்ந்த 3 பேரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




