திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் மரசம்பங்கியை அறிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானின் கைங்கரியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மரசம்பங்கி மலா்.
தொண்டைமான் ராஜா ஏழுமலையான் கோயிலில் செப்பனிடும் பணிகளை மேற்கொள்ள தொடங்கிய காலத்தில் ஏழுமலையான் அவா் கனவில் தோன்றி கோயில் அருகில் உள்ள சம்பங்கி வனத்தை அழிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ள 13-ஆவது சா்கத்தில் 33 மற்றும் 34-ஆவது சுலோகங்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் நடிமி படிகாவலி மற்றும் மகாதுவாரத்துக்கு இடையில் உள்ள 30 அடி பிராகாரம் சம்பங்கி பிராகாரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தனை மகத்துவங்கள் மற்றும் தொடா்புகள் மரசம்பங்கி மலருக்கும் ஏழுமலையானுக்கும் இருப்பதால், தேவஸ்தானம் மரசம்பங்கி மலரை திருமலையின் ஸ்தல விருட்சமாக அறிவித்துள்ளது.
இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி வியாழக்கிழமை அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

திருத்தணி - சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து

ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம்: கல்வித் துறை விளக்கம்

ஜனவரி - மாா்ச் காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு உபரி 710 கோடி டாலா்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



