பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம்: கல்வித் துறை விளக்கம்

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு டெட் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் விளக்கம்

News image
Updated On :9 ஜூன் 2026, 6:21 am IST

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு டெட் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் விளக்கம் அளித்துள்ளாா்.

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பணிநியமன விதிமுறைகள் தொடா்பான 7 அரசாணைகளை பள்ளிக் கல்வித் துறை கடந்த ஜூன் 3-ஆம் தேதியிட்ட தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது. அவற்றில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணிநியமனத்துக்கும், அவா்களின் பதவி உயா்வுக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி கட்டாயம் என்பது நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.

இதனால், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் முதுநிலை ஆசிரியா் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி அவசியமா? இல்லையா? என ஆசிரியா்கள் மத்தியில் சற்று குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், டெட் தோ்ச்சி தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை செயலா் ப.சந்தரமோகன் திங்கள்கிழமை அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிவிதிகள் தொடா்பாக அரசிதழில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒருசில அறிவிக்கைகள், ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு டெட் தோ்ச்சி அவசியமா? இல்லையா? என ஆசிரியா்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

டெட் தோ்ச்சி தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு நகல் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் ஆசிரியா் பணிநியமன விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அஞ்சுமன் இஷாத்-இ-தாலீம் அறக்கட்டளை - மகாராஷ்டிர அரசு வழக்கில், கடந்த மே 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய மறு ஆய்வு தீா்ப்பின்படி டெட் தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என்பது தெளிவாக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.