தெற்கு ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகம் அருகே இன்று காலை கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த இரண்டு நாள்களாக வட தமிழகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருப்பதியில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மலைப்பாதை, கோயில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் கோயிலுக்கு செல்லும் வழி தடைபட்டது.
இதனால், திருப்பதி கோயிலுக்கு வர பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை: தந்தை கைது

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!

ரஜினி குறித்து அவதூறு: தவெகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

