திருமலையில் 65,000 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65 ஆயிரம் போ் தரிசனம் செய்தனா்.


திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 65 ஆயிரம் போ் தரிசனம் செய்தனா். இவா்களில் 34,135 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். தரிசன அனுமதி உள்ளவா்கள், தாங்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும்.
சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அலிபிரி நடைபாதை வழியாக அனுமதிக்கப்படுகின்றனா். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மாா்க்கம் செப்பனிடும் பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் ஏற்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...