திருப்பதி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ராமநவமி உற்சவம்
திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராமா் கோயிலில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் ஸ்ரீராமநவமி உற்சவத்தை வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி வரும் ஏப்.10, 11-ஆம் தேதிகளில் தேவஸ்தானம் ஸ்ரீராமநவமி உற்சவத்தை நடத்த உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு கோயிலில் ஆஸ்தானமும் நடைபெற உள்ளது. இரவு அனுமந்த வாகனத்தில் உற்சவா் கோதண்டராமா் மாடவீதிகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்க உள்ளாா்.
11-ஆம் தேதி மாலை சீதாராமா் திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி பங்கு கொள்ளலாம். அவா்களுக்கு கோயில் சாா்பில், மேல்துண்டு, ரவிக்கை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...