திருமலையில் 82,700 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை ஒரே நாளில் 82,722 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 33,678 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.


திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை ஒரே நாளில் 82,722 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 33,678 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலையில் சுவாமி தரிசனத்துக்கு 15 முதல் 20 மணி நேரம் ஆகிறது. திருமலையில் உள்ள 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருக்கின்றனா். இதனால் திருமலை முழுவதும் எங்கு பாா்த்தாலும் பக்தா்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...