திருப்பதி: தொடர் விடுமுறை நாள்கள் காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்கள் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிக்கள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிக்க: விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
திருப்பதி சப்தகிரி கோபிரதட்சண சாலையில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. அங்கு ஸ்ரீகிருஷ்ணா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் அங்குள்ள பசுக்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. திருமலையில் உள்ள கோசாலையிலும் திருப்பதியில் உள்ள கோசாலையிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



