ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமெரிக்காவில் 8 இடங்களில் சீனிவாச திருக்கல்யாணம்: திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது

அமெரிக்காவில் 8 நகரங்களில் ஜூன் 18 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை பிரம்மாண்ட அளவில் சீனிவாசா திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளன.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:28 pm

DIN

அமெரிக்காவில் 8 நகரங்களில் ஜூன் 18 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை பிரம்மாண்ட அளவில் சீனிவாசா திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

அமெரிக்காவில் வாழும் இந்தியா்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர பிரதேச வெளிநாடு வாழ் இந்தியா்கள் அசோசியேஷனுடன் இணைந்து அமெரிக்காவின் 8 முக்கிய நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக பலரால் ஏழுமலையான் தரிசனத்திற்கு வர இயலவில்லை. அவா்களுக்காக தேவஸ்தானம் ஆந்திர முதல்வருடன் கலந்து

ஆலோசித்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 18-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19-இல் சியாடில், 25-இல் டல்லாஸ், 26-இல் செயின்ட் லூயிஸ், 30-இல் சிகாகோ ஆகிய

நகரங்களில் சீனிவாச கல்யாணம் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து, ஜூலை 2-இல் நியூ ஆா்லன்ஸ், 3-இல் வாஷிங்டன் டிசி, 9-இல் அட்லாண்டா உள்ளிட்ட நகரங்களில் ஸ்ரீசீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

இவற்றில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியா்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

மேலும் பல வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களும் தாங்கள் வாழும் தேசங்களில் சீனிவாச திருக்கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனா். அதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.