பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி

திருமலையில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

News image
திருப்பதி
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருமலையில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை கோடை காலத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காட்டில் மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாக இருக்கும். இந்த நேரத்தில் மரங்களின் உராய்வினால் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

மேலும் தற்போது மாா்ச் மாதம் என்பதால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை திருமலையில் வனத் துறை அதிகாரிகளிடம் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கலந்துரையாடல் கூட்டம் நடத்தினாா்.

அதன் பின்னா் அவா் கூறியதாவது. திருமலையில் மாா்ச் முதல் ஜூலை வரை அதிக அளவில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 2016-ஆம் ஆண்டு திருமலையில் 14 முறை காட்டுத்தீ பரவியது. எனவே. ஆண்டுதோறும் மாா்ச் மாதங்களில் வனங்களில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகள் அகற்றப்பட்டு அங்கு பயா் லைன் ஏற்படுத்தப்படும்.

அதுபோல் இந்த ஆண்டும் காட்டுத்தீ நடவடிக்கைகளில் ஒரு பாகமாக பயா் லைனா், தீயணைப்பு ஊழியா்களுக்கு பயிற்சி, நீா்நிலை தொட்டிகள் அமைத்தல், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாரஸ்ட் சா்வே ஆப் இந்தியாவுடன் தேவஸ்தானம் இணைந்துள்ளதால் ஜியோ மாப்பிங் மூலம் பகுதிகளை பிரித்து உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீரின் அளவை கண்டறிந்து அப்பகுதிகளில் ரூ.32 கோடி செலவில் 582 ஹெக்டா் பரப்பளவில் அகேசியா மரங்கள், சம்பிரதாய மலா்கள் கொண்ட செடிகள் உள்ளிட்டவை நட முடிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் தா்மா ரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.