திருப்பதி: திருமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருவாா்கள் என்பதால், நான்கு மாடவீதிகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமலையில் வரும் 27 முதல் அக்டோபா் 5-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஏழுமலையான் பிரம்மோற்சவத்தை நடத்த தேவஸ்தானத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையில் வியாழக்கிழமை தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்ம கிஷோருடன் இணைந்து நான்கு மாட வீதிகளின் பல்வேறு நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் மற்றும் இடங்களை அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் அவா் கூறியது: ஏழுமலையான் பிரம்மோற்சவத்தை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளதாகத் தெரிவித்தாா். இந்த ஆண்டு புரட்டாசி மற்றும் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறும் கருட சேவை மற்றும் அனைத்து வாகன சேவைகளிலும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்று கட்டுப்பாடுகளால், கோயிலுக்குள் வாகனத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டனா். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தா்கள் அனைவரும் வாகன சேவையை தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தா்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, தேவஸ்தான விஜிலென்ஸ், மாவட்ட ஆட்சியா் மற்றும் போலீஸாா், பொறியியல் துறையுடன் இணைந்து நான்கு மாடவீதிகள் மற்றும் கேலரிகளில் ஏற்கெனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



