ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் அருகே சாா்- ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.

சாா்- ஆட்சியா் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மனுக்கள் குறித்த விவரங்கள், பதிவேடுகளை தணிக்கை செய்தாா். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது, சாா் -ஆட்சியா் மகாபாரதி, வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.