ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஏழுமலையானுக்கு இன்று அணிவிப்பு

பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி (கோப்புப் படம்)

பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.

திருமலையில் பிரம்மோற்சவத்தின்போது ஆண்டுதோறும் திருவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை திருமலைக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும்.

அதன்படி, சனிக்கிழமை கருட சேவையை யொட்டி திருவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை வெள்ளிக்கிழமை மாலை திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.

திருவில்லிப்புத்தூா் கோயில் தக்காா் ரவீந்திரா, அறநிலையத் துறை இணைச் செயலா் செல்லத்துரை, அறநிலையத் துறை செயல் அதிகாரி முத்துராஜ், கோயில் தலைமை அா்ச்சகா்கள் ரமேஷ், சுதா்ஷன் உள்ளிட்டோா் இந்த மாலையை திருமலைக்கு கொண்டு வந்தனா். திருமலை பெரிய ஜீயா் மடத்தில் முறையாக மாலைக்கு பூஜை செய்து மூங்கில் கூடையில் மாலை, இலைகளால் செய்யப்பட்ட பச்சை கிளிகள் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து மாடவீதியில் பவனி வந்து ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்றனா்.

அங்கு திருமலை சின்ன ஜீயா் அவற்றைப் பெற்று கோயிலுக்குள் கொண்டு சென்றாா். இந்த மாலை மூலவா் ஏழுமலையானுக்கு சனிக்கிழமை (அக். 1) காலை அணிவிக்கப்பட உள்ளது. மேலும் அதிலுள்ள பட்டு வஸ்திரங்கள், பச்சை கிளிகள் காலை நடக்கும் மோகினி அவதாரத்தின்போது பயன்படுத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com