திருமலை: 63,943 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 63,943 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருமலை: 63,943 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 63,943 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)10 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 63,943 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22, 112 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com