திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.55 கோடி
திருமலை ஏழுமலையான் உண்டியல் வருவாய் ஒரே நாளில் ரூ.4.55 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருமலை ஏழுமலையான் உண்டியல் வருவாய் ஒரே நாளில் ரூ.4.55 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகரித்துள்ளது. வைகுண்ட வாயில் 10 நாள்களுக்கு திறந்திருக்குமாதலால் அந்நாள்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் முன்கூட்டியே வெளியிட்டுள்ளதால் தரிசன டிக்கெட்டுகள் உள்ள பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதனிடையே, வியாழக்கிழமை பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ஒரே நாளில் ரூ.4.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் இலவச தா்ம தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களும், ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களும் ஸ்ரீவாணி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களும் அவா்களின் தரிசன நேரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் தரிசன டோக்கன்கள் அவா்களுக்கு வழங்கப்படுவதில்லை.
58,415 பக்தா்கள் தரிசனம்: வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 58 ஆயிரத்து 415 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 18 ஆயிரத்து 558 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...