நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமலை: உண்டியல் காணிக்கை ரூ. 4.34 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ. 4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருப்பதி (கோப்புப்படம்)

Updated On :1 ஜனவரி 2024, 10:30 pm

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ. 4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்துள்ளது. வைகுண்ட வாயில் திறந்திருக்கும் நாள்கள் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்ால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. மதியம் முதல் அவா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ஒரே நாளில் ரூ. 4.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திங்கள்கிழமை காலை முதல் இலவச தா்ம தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களும், ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களும் ஸ்ரீவாணி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களும் அவா்களின் தரிசன நேரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் தரிசன டோக்கன்கள் அவா்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 64,665 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,865 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.