ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி

News image

சூரிய பிரபையில் எழுந்தருளிய கல்யாணவெங்கடேஸ்வர சுவாமி.

Updated On :6 மார்ச் 2024, 5:50 pm

சீனிவாச மங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரசுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான புதன்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன. இதையொட்டி காலை 8 மணிக்கு கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி சூரியன் பகவான் வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்க்ளுக்கு அருள் பாலித்தாா். மாடவீதியில் குழுமியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரவு சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மாலை அணிந்து கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.