சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்

திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்

Updated On :12 மார்ச் 2024, 10:44 pm

திருப்பதி விமான நிலையத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை கவுன்டா் புதன்கிழமை (மாா்ச் 13) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை கவுன்டா் கடந்தாண்டு திறக்கப்பட்டது. அங்கு நாள்தோறும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் 500 பக்தா்களுக்கு தேவஸ்தானம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் அளித்து வந்தது.

ஆனால் பக்தா்கள் வருகை குறைவாக இருந்ததால், விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த கவுன்டரை தேவஸ்தானம் திருமலைக்கு மாற்றியது. ஆனால் தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ளதையொட்டி புதன்கிழமை முதல் மீண்டும் திருப்பதி விமான நிலையத்தில் தேவஸ்தான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான கவுன்டரை திறக்க உள்ளது.

இதற்கு முன்பு வழங்கப்பட்டதைப் போலவே விமானப் பயணிகளுக்கும் ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிக்க வழங்கப்படும் போா்டிங் பாஸ் அளித்து இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.