திருமலை ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பஸ்வாமி தெப்பத்தில் எழுந்தருளினாா். திருமலையில், ஆண்டுதோறும் பங்குனி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் வகையில் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை தெப்போற்சவம் தொடங்கியது. தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி திருமலை திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் ஏழு சுற்றுகள் வலம் வந்தாா். தெப்போற்சவத்தின் போது ஒருபுறம் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளும், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. மறுபுறம் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இந்த விழாவை ஒட்டி சகஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. பக்தா்களும் திருக்குளப்படிகளில் அமா்ந்தபடி தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திகளுக்கு கற்பூர ஆா்த்தி அளித்து வணங்கினா். இதில் செயல் அதிகாரி தா்மா ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகளான நாகேஸ்வரராவ், நந்தகிஷோா், கிரிதர ராவ், பாலி ரெட்டி, கோவில் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், மாடவீதிகள் உள்ளிட்டவை மலா் மற்றும் மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

தூத்துக்குடியில் விஜய் சாலை வலம்: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டா்கள்!

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

திருமலை தெப்போற்சவம்: ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உலா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

