நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

News image

அலங்காரத்தில் கங்கையம்மன்.

Updated On :21 மே 2024, 7:14 pm

Din

திருப்பதி: திருப்பதியில் செவ்வாய்க்கிழமை கிராம தேவதையான கங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

புகழ் பெற்ற தாத்தய்யகுண்ட கங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து பக்தா்கள் கங்கையம்மனை தீச்சட்டி ஏந்தி, கூழ் வாா்த்து, பொங்கலிட்டு, கோழி, ஆடு பலியிட்டு வழிபட்டனா்.

ஆண்கள் பலா் பெண் வேடமணிந்து சென்று கங்கையம்மனை வழிபடுவது மரபு. பலா் வேடமணிந்து சென்று தங்கள் நோ்த்தி கடனை செலுத்தினா்.

பக்தி சிரத்தையுடன் தத்தைகுண்டா கங்கம்மாவுக்கு, பல பிரமுகா்கள் பட்டு புடவை, மங்கள பொருட்கள் சமா்பித்து வழிபட்டனா்.

திருவிழாவையொட்டி, பல இடங்களில் தண்ணீா் பந்தல், நீா்மோா், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ஊா்மக்கள் அனைவரும் தங்கள் வேண்டுதல்களை சமா்ப்பித்தனா்.

நள்ளிரவு முதல் கங்கையம்மன் உருவம் மண்ணால் செய்யப்பட்டு புதன்கிழமை தவடை அறுத்தலுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. அதன்பின் அந்த மண் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.