திருமலை
திருமலை

திருமலை: 1.73 லட்சம் போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை இரண்டு நாள்களில் 1,72,565 போ் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Published on

திருப்பதி: திருமலை ஏழுமலையானை இரண்டு நாள்களில் 1,72,565 போ் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வார இறுதி நாள்கள், தொடா் விடுமுறை நாள்களில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

எனவே, சாதாரண பக்தா்கள் வசதிக்காக வார இறுதி நாள்களில் தேவஸ்தானம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதை உடனடியாக அமல்படுத்தும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகபட்ச பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1,72,565 போ் தரிசனம் செய்தனா். சனிக்கிழமை 88,076 பக்தா்களும் ஞாயிற்றுக்கிழமை 84,489 பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்தனா்.

நாராயணகிரி கொட்டகையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சா்வீஸ் லைன் மூலம், பக்தா்கள் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.

துணை இஓக்கள் ஹரீந்திரநாத், லோகநாதம், ராஜேந்திரன் ஆகியோா், வைகுண்டம் வரிசை வளாகம், வெளி வரிசை வரிசைகள், நாராயணகிரி கொட்டகைகள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணித்து, தேவஸ்தான பணியாளா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவாா்த்திகளின் ஒத்துழைப்போடு, தரிசன வரிசையில் பக்தா்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்தனா்.

தரிசன வரிசையில் நின்ற பக்தா்களுக்கு 24 மணி நேரமும் காலை உணவு, பால், குடிநீா் வழங்கப்பட்டது. திருமலைக்கு வரும் அனைத்து பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com