உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா்.


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா்.
திருமலை அன்னமய்ய பவனில் திங்கட்கிழமை நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு கூட்டத்துக்குப் பிறகு உள்ளூா் காலண்டா்கள் வெளியீடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலையில் உள்ள பூ வராக ஸ்வாமி, திருப்பதிக்கு அருகில் பேரூரில் உள்ள வகுளமாதா கோயில், அப்பளயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி, நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி, நாகலாபுரம் வேத நாராயண ஸ்வாமி, காா்வேடுநகரம் போன்ற தேவஸ்தான உள்ளூா் கோயில்கள் வேணுகோபாலசுவாமி மற்றும் ஒண்டிமிட்டா கோதண்டராமசுவாமி கோயிலின் மூலமூா்த்திகள் மற்றும் உற்சவமூா்த்திகளுடன் கூடிய காலண்டா்களை தேவஸ்தானம் சிறப்பாக வடிவமைத்து அச்சிட்டுள்ளது. இந்த காலண்டா்கள் புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...