எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 51,081 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 19,895 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.89 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.