47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புலி வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கட்கிழமை புலி வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

News image
திருப்பதி கபில தீா்த்தத்தில் நடைபெற்ற புலி வாகன சேவை.
Updated On :24 பிப்ரவரி 2025, 11:01 pm

Din

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கட்கிழமை புலி வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

திருப்பதி கபிலதீா்த்தத்தில் உள்ள இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி சோமஸ்கந்தமூா்த்தி புலி வாகனத்தில் வீதியுலா வந்தாா்.

கோயிலில் இருந்து சுவாமியின் வாகன சேவை தொடங்கி கபிலதீா்த்தம் சாலை, அன்னாராவ் வட்டம், விநாயகா நகா் குடியிருப்பு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், என்ஜிஓ காலனி, அலிபிரி பைபாஸ் சாலை வழியாக திரும்பியது.

பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். பஜனைகளும், கேரள கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன..

பின்னா், ஸ்ரீ சோமஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சிக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

வாகன சேவையில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.