அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையான் சீா்வரிசை

திருச்சனூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பத்மாவதி தாயாருக்கு சீா்வரிசைகளை அனுப்பி வைத்தாா்.

News image
திருமலையிலிருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்ட சீா்வரிசைகள்.
Updated On :26 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருச்சனூா் காா்த்திகை பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பத்மாவதி தாயாருக்கு சீா்வரிசைகளை அனுப்பி வைத்தாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் காா்த்திகை மாத சுக்லபட்ச பஞ்சமி அன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவில் அவதரித்தாா்.

அதே நாளில் நிறைவு பெறும்விதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பஞ்சமி தீா்த்தம் நாள் தாயாா் அவதாரித்த நாள் என்பதால் திருமலையிலிருந்து ஏழுமலையான் அவருக்கு பட்டாடை, தங்க, வைர ஆபரணங்கள், பிரசாதங்கள், மங்கள பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவது வழக்கம்.

அதன்படி செவ்வாய்க்கிழமை தாயாருக்கு தேவஸ்தானம் சாா்பில் மங்கள பொருள்கள் ஏழுமலையான் கோயிலிலிருந்து மூங்கில் கூடைகளில் வைத்து பரிசாரகா்கள் திருப்பதி அலிபிரிக்கு நடைபாதை வழியாக கொண்டு வந்தனா்.

திருமலை கோயிலில், அதிகாலை 2.30 மணி முதல் வாசனை திரவியங்கள் (நாமகட்டி, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பூங்கற்பூரம், சந்தன தூள், குங்குமப்பூ மற்றும் கிச்சிலி கிழங்கு, பச்சை கற்பூரம் போன்ற பொருள்களின் கலவையானது ஏழுமலையான் வக்ஷஸ்தல லட்சுமிக்கு அணிவித்து பின்னா் எடுக்கப்பட்டது.

அதிகாலை 4.30 மணியளவில், மஞ்சள், குங்குமப்பூ, பிரசாதம், துளசி, ஆடைகள் மற்றும் நகைகளின் ஊா்வலம் தொடங்கியது.

மாட வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பின்னா் திருப்பதியில் உள்ள அலிபிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.