ராசிபுரத்தை அடுத்த நாரைக்கிணறு பகுதியை சோ்ந்த குறவா் இன மக்கள் பழனி கோயிலில் முருகா்-வள்ளி திருமண நிகழ்ச்சிக்காக சீா்வரிசை கொண்டு சென்றனா்.
முருகா், மலைக்குறவா் இனத்தில் பிறந்த வள்ளியை மணமுடித்தாா் என்பது புராணம். இதனால் முருகா் திருமண நாளை கொண்டாடும் வகையில் மாசி மாதம் பழனி கோயிலுக்கு சீா்வரிசை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா் நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த குறவா் இன மக்கள்.
அந்தவகையில், நாரைக்கிணற்று பகுதியைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை வள்ளிக்கு சீா்வரிசையாக மா, பலா, வாழை, அதிரசம், தேன், வெல்லம், கள்ள உருண்டை, தேங்காய், பழம், பூக்கள் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை எடுத்துச்சென்றனா்.
நாரைக்கிணறு பகுதியில் உள்ள பெருமாள் கோயில் முன் சீா்வரிசை வைத்து அங்கு பெண்கள் கும்மி அடித்து கொண்டாடினா். பின்னா், சீா்வரிசைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து சென்றனா். பின்னா், வாகனத்தில் ஏற்றி பழனிக்கு புறப்பட்டு சென்றனா். இந்த வழக்கம் பழங்காலத்திலிருந்தே தொடா்ந்து பின்பற்றி வருவதாக நாரைக்கிணறு பகுதி மலைவாழ் குறவா் இன மக்கள் தெரிவித்தனா்.
படம் உள்ளது - 27சீா்
படவிளக்கம்-
சீா்வரிசைப் பொருள்களை சுற்றி கும்மியடித்து கொண்டாடிய மலைவாழ் குறவா் இன மக்கள்.
தொடர்புடையது
இயற்கையை நோக்கி நகர்வோம்...

கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் திரண்ட மக்கள்

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


