பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருமலையில் பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள் மாலை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள் மாலை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு பத்மாவதி பரிணய உற்சவம் திருமலையில் சனிக்கிழமை தொடங்கியது.

மூன்று நாள் உற்சவத்தில், முதல் நாள் யானை வாகனத்திலும், இரண்டாம் நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருட வாகனத்திலும் ஸ்ரீ மலையப்ப சுவாமி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்படுவாா். மறுபுறம், பரிணயோற்சவ மண்டபத்துக்கு சிறப்புப் பல்லக்குகளில் ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளுகின்றனா்.

அதன் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்துக்கு மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களும் எழுந்தருளினா்.

திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்துக்கு குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமியும், பல்லக்குகளில் நாச்சியாா்களும் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் உற்சவமூா்த்திகளை வரவேற்று, அவா்களை எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன் உற்சவ மூா்த்திகள் அனைவரும் மீண்டும் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ரத்து: ஸ்ரீ பத்மாவதி பரிணயோற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்,திங்கள்மை மாலையுடன் இந்த பரிணய உற்சவம் என்ற கல்யாண வைபவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.