மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.09 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image

திருமலை ஏழுமலையான் கோயில்

Updated On :29 ஏப்ரல் 2026, 6:34 pm

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறையால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 68,986 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,511 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.