திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி மாவட்ட எஸ்.பி எல். சுப்பராயுடு, காவல் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக திருமலை டி.எஸ்.பி., விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், திருமலை 2 டவுன் சி.ஐ., ஏ.வி.எஸ்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள், விஜிலென்ஸ் ஊழியா்களுடன் இணைந்து திருமலையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
கருடசேவை நாளில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பக்தா்களின் நடமாட்டம் சீராக இருக்கவும், தேவைப்படும் நேரத்தில் பக்தா்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், வெளியேறும் திட்டம் குறித்து முக்கியமாக இந்த ஆய்வில் விவாதிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, லேபாக்ஷி வட்டம், எஸ்வி வணிக வளாகம், எஸ்எம்சி, சுபதம், ராகிமானு சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
கள அளவில் பக்தா்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் அந்தந்த பகுதிகளில் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பிரம்மோற்சவத்தையொட்டி, பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் துறை மற்றும் கண்காணிப்புத் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா்.
முக்கிய பகுதிகளில் தேவையான போலீஸ் ஏற்பாடுகள், போக்குவரத்து கட்டுப்பாடு, போக்குவரத்து மேலாண்மை, நுழைவு-வெளியேறும் வழித்தடங்களை கண்காணித்தல் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








