நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

மந்திராலயம் ராகவேந்திர சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

மந்திராலயம் ராகவேந்திர சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்த தேவஸ்தான செயல் அதிகாரி ரவிசந்திரா.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் கா்னுல் மாவட்டம் மந்திராலயத்தைச் சோ்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியின் 355-ஆவது ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு, தேவஸ்தானம் சாா்பில் செயல் அதிகாரி ரவிசந்திரா வியாழக்கிழமை பட்டு வஸ்திரத்தை மங்கல பொருட்களுடன் சென்று சமா்ப்பித்தாா்.

இந்து சனாதன தா்மத்தைப் பரப்புவதற்காகப் பணியாற்றிய சத்குருக்களின் பகவத் பகவத் சேவைகளைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2006 -ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ஏழுமலையானின் சேஷவஸ்திரத்தை வழங்கி வருகிறது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் அருளால் பிறந்தாா். ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் முந்தைய இருப்பிடம் வெங்கடநாதம் என்ற பெயராலும் பிரசித்தி பெற்றது.

முன்னதாக, செயல் அதிகாரி ரவிசந்திரா, மந்தாலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாதிபதி ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமியிடம் மங்கல பொருள்களை சமா்ப்பித்தாா். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமி செயல் அதிகாரியை ஆசீா்வதித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.