திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் மூடல்

சந்திர கிரகணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.

News image

திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

சந்திர கிரகணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயில் மூடப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் கோயில் கிரகண காலங்களில், கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் மூடப்படுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிமுதல் 6.45 மணிவரை கிரகணம் நிகழ்ந்ததால் காலை 9 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டது.

அதற்கு முன் தரிசன வரிசையில் காத்திருந்த ஒவ்வொரு பக்தருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு, பின்னா் நடைமூடப்பட்டது.

அத்துடன், மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையம் மற்றும் லட்டு விற்பனை மையங்களும் மூடப்பட்டது.

அனைத்து இடங்களிலும் பக்தா்களுக்கு புளியோதரை பொட்டலங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரகணம் நிறைவு பெற்று மாலையில் கோயில் சுத்தம் செய்யப்பட்டு புண்யாஹவசனத்திற்குப் பிறகு பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனா்.

அதே போல், திருப்பதி மற்றும் நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான கோயில்களும் மூடப்பட்டனது , என்று அவா் கூறினாா்.

இதில், தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி. சுப்பராயுடு, ஏழுமலையான் கோயில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.