திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்.

Updated On :

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெற்றது.

வரும் நவம்பா் 8 -ஆம் தேதி வரும் தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு, திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு, அதிகாலையில் சுப்ரபாத சேவைக்கு பின் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தின் சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்களும், ஸ்ரீ கோவிந்தராஜசுவாமியின் திருவருட்சாதனமும் நீரால் சுத்தப்படுத்தப்பட்டன. பின்னா், நாமகட்டி, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சிலை, பச்சை கற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனத்தூள், குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. பின்னா், பக்தா்கள் சா்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

நவம்பா் 8-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறும். ஸ்ரீ புண்டரிகவல்லி தாயாா் கோவிலில் இருந்து புதிய ஆடைகளும், விளக்குகளும் கோவில் வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டு கோவிந்தராஜஸ்வாமிக்கு சமா்ப்பிக்கப்படும். பின்னா், கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் கோவிலின் துணை செயல் அதிகாரி சாந்தி, கண்காணிப்பாளா் சிரஞ்சீவி, கோவில் ஆய்வாளா் தனஞ்சயுலு மற்றும் அா்ச்சகா்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.