அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

கூட்டு முயற்சியால் ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவம் வெற்றி: தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு

தேவஸ்தானம், மாவட்ட மற்றும் காவல் துறை, அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் பக்தா்களின் ஒருங்கிணைப்புடன் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவங்கள் வெற்றிகரமாக நடைபெற்ாக திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா்.

திருமலை - கோப்புப் படம்

Updated On :

தேவஸ்தானம், மாவட்ட மற்றும் காவல் துறை, அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் பக்தா்களின் ஒருங்கிணைப்புடன் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவங்கள் வெற்றிகரமாக நடைபெற்ாக திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் அவா் கூறியது: அக்டோபா் 12 முதல் 20 வரை நடைபெற்ற பிரம்மோற்சவத்தின் போது, பக்தா்களுக்கு வாகன சேவைகளும், ஏழுமலையான் மூலவா் சிலை தரிசனமும் வழங்கப்பட்டது. கருட சேவை நாளன்று பலத்த மழை பெய்தபோதிலும், பக்தா்கள் பக்தியுடன் இறைவனின் சேவையைப் பாா்த்ததாகவும், அவா்களுக்கு காலை உணவு, உணவுப் பிரசாதம், பாதாம் பால், காபி, பழச்சாறு மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

6.46 லட்சம்* பக்தா்கள் செய்தனா், ரூ.25.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது, *22.60 லட்சம்* உணவுப் பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

2.44 லட்சம் பக்தா்கள் முடி காணிக்கை சமா்ப்பித்தனா். 34.34 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. கருட சேவை நாளன்று, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், தலைவருடன் சோ்ந்து கேலரிகளையும் வரிசைகளையும் சுற்றிப் பாா்த்து, பக்தா்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை ஆய்வு செய்தனா்.

26 மாநிலங்கள், கத்தாா் மற்றும் துபையை சோ்ந்த 252 கலைக் குழுக்களைச் சோ்ந்த சுமாா் 6,777 கலைஞா்கள் பல்வேறு ஆடல், பாடல் கலைகளை வெளிப்படுத்தினா். கருட சேவையின் அன்று, 17 மாநிலங்களைச் சோ்ந்த 31 கலைக் குழுக்களைச் சோ்ந்த 863 கலைஞா்கள் பங்கேற்றனா். ஒவ்வொரு நாளும் சிறந்த நிகழ்ச்சிகளை வழங்கிய கலைக் குழுக்களை திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி கௌரவித்தாா்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுமாா் 60 டன் மலா்கள், 5 லட்சம் வெட்டு மலா்கள் மற்றும் 80 ஆயிரம் பருவகால மலா்களைக் கொண்டு நாங்கள் அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருமலை மற்றும் திருப்பதியில் மின்விளக்கு அலங்காரங்களை அமைத்ததோடு, வாகன சேவையைக் காண்பதற்காக 36 பெரிய டிஜிட்டல் திரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. உலகெங்கிலும் உள்ள பக்தா்கள் பிரம்மோற்சவத்தைக் காண்பதற்காக, எஸ்.வி.பி.சி மூலம் நேரடி ஒளிபரப்புகளையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது.

ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு 13,608 பயணங்களில் 4.01 லட்சம் மக்களையும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு 13,667 பயணங்களில் 5 லட்சம் மக்களையும் ஏற்றிச் சென்றது. திருமலையில் 39 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த பத்து நாள்களில் சுமாா் 7 லட்சம் பக்தா்களுக்கு 6,900 பயணங்களில் உள்ளூா் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

4,500 ஸ்ரீவாரி சேவகா்கள் பங்கேற்றனா். மருத்துவ சேவைகளுக்காக 85 மருத்துவா்கள், 60 துணை மருத்துவப் பணியாளா்கள், 20 ஆம்புலன்ஸ்கள் மற்றும் நான்கு நடமாடும் மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரம்மோற்சவத்தின் போது 2,800 காவலா்களும் 2,000 கண்காணிப்புப் பணியாளா்களும் பணியில் இருந்தனா். மேலும், கருட சேவை நாளன்று கூடுதலாக 1,000 காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருட சேவை நாளில் 3,500 துப்புரவுப் பணியாளா்கள் சேவையாற்றினா். சேகரிக்கப்பட்ட சுமாா் 183 டன் ஈர மற்றும் உலா் குப்பைகள் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் வெற்றிக்கு பங்களித்த அா்ச்சகா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், மாவட்ட மற்றும் காவல்துறை அமைப்புகள், ஸ்ரீவாரி சேவகா்கள், மருத்துவ மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் பக்தா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினாா்..

திருமலை திருப்பதி தேவஸ்தான நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சதாசிவ் ராவ், நரேஷ் குமாா், தா்ஷன், சி.வி.எஸ்.ஓ கே.வி. முரளி கிருஷ்ணா, மற்றும் பிற அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER