ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமியின் பவித்ரோற்சவம் நிறைவு

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற பவித்ரோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மகா பூா்ணாஹூதியுடன் நிறைவு பெற்ற பவித்ரோற்சவம்.

Published On :

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற பவித்ரோற்சவம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் பிராா்த்தனையுடன் இறைவன் எழுப்பப்பட்டு, தோமாலை சேவை மற்றும் சகஸ்ரநாமரசனம் நிகழ்த்தப்பட்டன. பின்னா், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் உற்சவங்கள் யாகசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை நான்கு மாட வீதிகளின் வழியாக உற்சவ மூா்த்திகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுவாா்கள். இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை கோயில் யாகசாலையில் நடைபெறும் வேத சடங்குகள், பூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது.

இதில் கோயிலின் துணை செயல் அதிகாரி வி. ஆா். சாந்தி, உதவி செயல் அதிகாரி ஏ. பி. நாராயண சௌத்ரி, கண்காணிப்பாளா்கள் சேஷகிரி, சிரஞ்சீவி, கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.