கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 80,000 கோடி: அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்
தமிழக்தில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 80 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக்தில் கல்வி மேம்பாட்டுக்காக ரூ. 80 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.
செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்று 535 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வருகிறார். 5-ஆவது ஆண்டுக்கான மடிக்கணினி இன்னும் ஓரிரு மாதங்களில் வழங்கப்பட உள்ளது. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தைப் பின்பற்றி இப்போது இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
படிக்கும் மாணவர்கள் புதிதாக ஏதாவது மென்பொருளைக் கண்டுபிடித்தால் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசும், ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 5-இல் ஒரு பங்காக சுமார் ரூ. 80 ஆயிரம் கோடி கல்விக்காக செலவிடப்படுகிறது. மாநில அளவில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிக்கு 5 பவுன் நகை பரிசாக வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் விமலா மகேந்திரன், வெம்பாக்கம் துணைத் தலைவர் தூசி கே.மோகன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கட்டடக் குழுத் தலைவர் அ.அருணகிரி, சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சி.துரை, கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.வெங்கடேசன், பெற்றோர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

