வறண்டுபோன கிணறுகள் தண்ணீரைத் தேடும் கிராம மக்கள்!
தண்டராம்பட்டு அருகே சின்னதண்டா கிராமத்தில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதால், குடிநீர் விநியோகம் பாதித்து தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலையும் நிலை உள்ளது.


தண்டராம்பட்டு அருகே சின்னதண்டா கிராமத்தில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதால், குடிநீர் விநியோகம் பாதித்து தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலையும் நிலை உள்ளது.
தண்டராம்பட்டு ஒன்றியம், போந்தை ஊராட்சிக்குள்பட்டது சின்னதண்டா கிராமம். இங்கு வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்காக 2 கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த கிணறுகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் கோடை காலத்தில் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான மாதங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே தண்ணீருக்கு பஞ்சம்தான்.
ஏரிக்கரையின் அருகே உள்ள ஊர் கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், அந்த கிணற்றிலோ, ஏரியில் தண்ணீர் இருக்கும் வரைதான் தண்ணீர் கிடைக்கும். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஏரியிலும் தண்ணீர் இல்லை. கிணற்றிலும் தண்ணீர் இல்லை.
இதன் காரணமாக ஊரின் மையத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறுடன் கூடிய 4 சிறுமின்விசை குடிநீர்த்தொட்டிகளுக்கு போதிய நீர் வருவது இல்லை.
இந்த 4 சிறுமின்விசை குடிநீர்த்தொட்டிகளில் ஒன்று புதிதாக அமைத்தபோது தண்ணீர் இல்லாததால், பயன்பாட்டுக்கே வராமல் போனது. மற்றொன்று தண்ணீரின் வறண்டுவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டில் நாளொன்றுக்கு 10 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் குடிநீருக்கும், வீட்டுத் தேவைகளுக்கும், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய கிணறுகளுக்கும் தண்ணீரைத் தேடி மக்கள் அலைகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்றனர்.
"நடவடிக்கை எடுக்கப்படும்'
இது குறித்து தண்டராம்பட்டு கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியது:
சின்னதண்டா கிராமத்தில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டதால், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற்று விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், அவர்களும் தண்ணீர் தருவதை நிறுத்திவிட்டனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதிதாக ஒரு கிணறும், கை பம்பும் அமைத்துத் தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஆய்வு செய்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரை அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...