திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் இடங்களைத் தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அன்ன தானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அன்ன தானம் வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அன்ன தானம் வழங்க நிதி அளிப்போர் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கலாம். இந்த நிதியைக் கொண்டு திருவண்ணாமலை நகரம், ஆணாய்ப்பிறந்தான், அடிஅண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, பயிற்சி துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய்ப்பிறந்தான், அடிஅண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் பகுதிகளில் அன்ன தானம் வழங்குவதற்கான இடங்களை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.
ஆய்வின்போது, திருவண்ணாமலை வட்டாட்சியர் ஆர்.ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புருஷோத்தமன், கருணாகரன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், ஊராட்சிச் செயலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.