எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு ஊராட்சியில் எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு ஊராட்சியில் எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சேத்துப்பட்டு அண்ணாமலையார் எரிவாயு உருளை முகவர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன் உரிமையாளர் ரமணிபாய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஆயில் நிறுவன சென்னை மண்டல மேலாளர் ரமேஷ் கலந்து கொண்டு, எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜசேகர், எரிவாயு உருளை முகவர் நிறுவனம் மேலாளர் சத்தியன் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com