திருவண் ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியர் பலராமன் முன்னிலை வகித்தார். புதிய பார்வை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கிளை நூலகர் சரஸ்வதி, நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, காமராஜரின் புகழ் குறித்து புலவர் கோவிந்தசாமி, வேதாத்திரி மகரிஷியின் மகிமைகள் குறித்து சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிர்வாகி சந்திரசேகர், வருவாய்த் துறை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், திருவண்ணாமலை டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், ரூ.1,000 செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு!

போராடும் மாணவர்கள் 'தேச விரோதிகளா'? - மோடி அரசுக்கு சோனியா காந்தி கேள்வி
ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay


