பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

லால்குடி பகுதியில் குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய்த் தாக்குதல்

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட வயல்..

Published On :

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

லால்குடி பகுதியில் உள்ள தாளக்குடி, மேலவாளாடி, கீழவாளாடி, மாந்துறை, நகா், திருமங்கலம், இடையாற்று மங்கலம், மயிலரங்கம், கூகூா் உள்ளிட்ட பகுதிகள் குறுவை நெல் சாகுபடியில் ஏடிடி 36, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 16, கோ 55 போன்ற நெல் ரகங்கள் பரவலாக சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வெயிலால், நெற்பயிரில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பரவலாகக் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

இதை கட்டுப்படுத்த இலைப் பேனுக்குத் தயோமெத்தாக்சம் மருந்தையும், கருகல் நோய்க்கு டபுகோனசோல் மற்றும் சல்பா் கலந்த மருந்துக் கலவையையும் விவசாயிகள் பயன்படுத்தலாம் என வேளாண்மை துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.