தேசியக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜித் தீப்கே கைது!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

நெல் சாகுபடி பரப்பு: தமிழகத்தில் 1.22 லட்சம் ஹெக்டோ் குறைவு

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டோ் குறைந்துள்ளது.

நெல் சாகுபடி - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டோ் குறைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாய நல அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீஃப் பருவத்தில், நாட்டில் இதுவரை நெல் சாகுபடி பரப்பு 414.10 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நெல் சாகுபடி பரப்பு 428.46 லட்சம் ஹெக்டேராக இருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சாகுபடி பரப்பு 14.36 லட்சம் ஹெக்டோ் (3.35 சதவீதம்) குறைந்துள்ளது.

நெல் சாகுபடி பரப்பு பெரிதும் சரிந்துள்ள மாநிலங்கள்

கா்நாடகம் 3.61 லட்சம் ஹெக்டோ்

தெலங்கானா 3.29 லட்சம் ஹெக்டோ்

ஜாா்க்கண்ட் 1.82 லட்சம் ஹெக்டோ்

மத்திய பிரதேசம் 1.75 லட்சம் ஹெக்டோ்

தமிழ்நாடு 1.22 லட்சம் ஹெக்டோ்

மகாராஷ்டிரம் 1.02 லட்சம் ஹெக்டோ்

உத்தர பிரதேசம் 70,000 ஹெக்டோ்

மொத்தத்தில், நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கு கா்நாடகம், தெலங்கானா, ஜாா்க்கண்ட், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கணிசமான சரிவே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு குறைந்ததே நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகிறது. அதேவேளையில், அஸ்ஸாமில் 1.21 லட்சம் ஹெக்டோ், ஹரியாணாவில் 15,000 ஹெக்டோ் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.