திருவத்திபுரம் நகராட்சிக்கு புதிய ஆணையாளரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சியில் திருவத்திபுரம் நகராட்சியும் ஒன்றாகும். இது கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் 13 வார்டுகள் இருந்ததை 18 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. தற்போது 27 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நகராட்சியின் ஆணையாளராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர், வந்தவாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருவத்திபுரம் நகராட்சியின் கூடுதல் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், 2018 மார்ச் 31 முடிய நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ. 144 லட்சத்தில் ரூ. 64 லட்சமும், குடிநீர் வரி ரூ. 60 லட்சத்தில் ரூ. 28 லட்சமும், நகராட்சியின் கடைகள் வாடகை வரி ரூ. 112 லட்சத்தில் ரூ. 51 லட்சமும், தொழில் வரி ரூ.19 லட்சத்தில் ரூ. 1.32 லட்சமும்தான் வசூலாகியுள்ளன. மொத்தத்தில் 45 சதவீத அளவுக்கு மட்டுமே வரி வசூலாகியுள்ளது.
இதனால், நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், நகர்ப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
"சீல்' வைத்த கடைகள் மீண்டும் திறப்பு: திருவத்திபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வியாபாரம் செய்து வரும் பலர், பல ஆண்டுகளாக கடை வாடகை செலுத்தாமல் உள்ளதாகத் தெரிகிறது. கடை வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினற் "சீல்' வைத்தனர்.
எனினும், மறுநாளே நகராட்சியின் அனுமதியில்லாமல் சீலை உடைத்து கடையைத் திறந்து வியாபாரம் செய்து வருவதாகத் தெரிகிறது.
வருவாய்க் கோட்ட தலைமையிடமாக இருக்கும் செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு புதிதாக ஆணையாளரை நியமித்தால்தான் வரி வசூல் ஒழுங்காக நடைபெறும். நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய பல்வேறு நிலுவை வரிகளை வசூல் செய்து நகரின் வளர்ச்சித் திட்டப் பணிகள் முடுக்கிவிட வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

