செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை முன்னே சென்ற தனியார் பேருந்தை பின்னால் வந்த பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது, 2 பேருந்துகளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
செய்யாறிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக 2 தனியார் பேருந்துகள் சென்றன. செய்யாறு கன்னியம் நகர் ஏரிப்பகுதி அருகே முன்னே சென்ற பேருந்தை பின்னால் சென்ற பேருந்து முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, முன்னால் சென்ற பேருந்தின் பின் பகுதியில் முந்திச் செல்ல முயன்ற பேருந்து மோதியது. இந்த விபத்தில் முந்திச் செல்ல முயன்ற பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்ததுடன், அதன் ஓட்டுநர் காயமடைந்தார். மேலும், இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் காயமடைந்தார். இவர்கள் இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த செய்யாறு போலீஸார் விபத்தில் சிக்கிய 2 பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


